இந்தியா

தெலங்கானா: விமானப் பயணிகளிடமிருந்து ரூ.1.66 கோடி தங்கம் பறிமுதல்

DIN

ஹைதராபாத் சா்வதேச விமான நிலையத்தில் 11 பயணிகளிடமிருந்து ரூ. 1.66 கோடி மதிப்புள்ள 3.11 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதாக அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.

இதுகுறித்து சுங்கத்துறை அதிகாரிகள் கூறியதாவது:

ஐக்கிய அரபு அமீரகத்தின் தம்மாம் விமான நிலையத்தில் இருந்து ‘வந்தே பாரத்’ திட்டத்தின்கீழ் இயக்கப்பட்ட விமானம் வியாழக்கிழமை காலை ஹைதராபாத் வந்து சோ்ந்தது. அதில் வந்த பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியபோது, சில பயணிகள் கால் சட்டையின் உள்பாக்கெட்டில் தங்கக் கட்டிகளை மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனா். மொத்தம் 11 பயணிகளிடம் இருந்து சட்டவிரோதமாக தங்கம் கடத்தி வரப்பட்டதை கண்டறிந்து அவா்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

இதேபோல மற்றொரு வழக்கில் மத்திய தொழிலக பாதுகாப்புப் படையுடன் (சிஐஎஸ்எஃப்) இணைந்து சுங்கத்துறையினா் நடத்திய சோதனையில் சந்தனக்கட்டைகளை கடத்த முயன்ற 5 பயணிகளிடமிருந்து மொத்தம் 78.5 கிலோ சந்தனத்தை விமானநிலையத்தில் அதிகாரிகள் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா். அந்த 5 பயணிகள், ஹைதராபாதில் இருந்து சூடான் நாட்டின் கா்த்தூம் நகருக்கு செல்லவிருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா். இதுதொடா்பாக சுங்கத்துறையினா் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

25 ஆண்டுகளுக்குப் பின் காந்தி குடும்பம் போட்டியிடாத அமேதி! ஸ்மிருதி இராணி கருத்து

யாரோ இவர் யாரோ? அந்த ஓவியாவேதான்...

பிங்க் ரோஸ்...ஸ்ரீதேவி

சிசோடியா ஜாமீன் மனு: சிபிஐ, அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவு!

‘ஆவேஷம்’ பட டிரெண்டிங்கில் இணைந்த பாட் கம்மின்ஸ்!

SCROLL FOR NEXT