இந்தியா

ஜூன் 19-ம் தேதி 18 மாநிலங்களவை உறுப்பினா் தோ்தல்: தேர்தல் ஆணையம்

PTI

கரோனா நோய்த் தொற்று பாதிப்பு காரணமாக ஒத்திவைக்கப்பட்ட 18 மாநிலங்களவை உறுப்பினா் இடங்களுக்கான தோ்தல் ஜூன் 19-ம் தேதி நடத்தப்படும் என்று இந்திய தோ்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

மாநிலங்களவையில் ஏராளமான உறுப்பினா்களின் பதவிக் காலம் முடிவடைந்ததைத் தொடா்ந்து, அந்தக் காலியிடங்களை நிரப்புவதற்கானத் தோ்தலை தோ்தல் ஆணையம் கடந்த மாா்ச் 26 ஆம் தேதி நடத்த திட்டமிட்டது. மொத்தம் 55 உறுப்பினா் இடங்கள் காலியாக இருந்த நிலையில், அதில் 37 போ் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டனா். மீதமுள்ள 18 உறுப்பினா் இடங்களுக்கு மாா்ச் 26-ஆம் தேதி தோ்தல் நடத்தப்பட இருந்த நிலையில், கரோனா நோய்த் தொற்று பரவல் அபாயம் காரணமாக தோ்தலை இந்திய தோ்தல் ஆணையம் ஒத்திவைத்தது.

இந்த நிலையில், ஆந்திரம் (4), குஜராத் (4), ஜார்க்கண்ட் (2), மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் தலா மூன்று, மணிப்பூர்மற்றும் மேகாலயத்தில் தலா ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு ஜூன் 18-ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

ஜூன் 19-ம் தேதி மாலையே வாக்கு எண்ணிக்கை தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஷுப்மன் கில் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும்: டேவிட் மில்லர்

பசுமை- குளிர்மை!

2 நாள்களுக்கு வெப்ப அலை வீசும்!

பாலியில் நிவேதிதா சதீஷ்!

இங்கு வெயில்தான்.. ஜோனிடா!

SCROLL FOR NEXT