முகப்பு
இந்தியா

தாராவியில் மேலும் 25 பேருக்கு கரோனா தொற்று

மகாராஷ்டிரம், மும்பை மற்றும் தாராவியில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் புதிதாக பாதிப்புக்குள்ளானோர் பற்றிய சமீபத்திய தகவல்கள் வெளியாகியுள்ளன.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:44 PM
பகிர்:


மகாராஷ்டிரம், மும்பை மற்றும் தாராவியில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் புதிதாக பாதிப்புக்குள்ளானோர் பற்றிய சமீபத்திய தகவல்கள் வெளியாகியுள்ளன.

மகாராஷ்டிரம்:

மகாராஷ்டிரத்தில் புதிதாக 2,287 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் 103 பேர் பலியாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து அங்கு மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 72,300 ஆக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் 1,225 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை மொத்தம் 31,333 குணமடைந்துள்ளனர். 

மும்பை:

மும்பையில் புதிதாக1,109 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 49 பேர் பலியாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து மும்பையில் மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 41,986 ஆக உயர்ந்துள்ளது. மொத்தம் பலி 1,368 ஆக உயர்ந்துள்ளது.

தாராவி:

தாராவியில் மேலும் 25 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அங்கு மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 1,830 ஆக உயர்ந்துள்ளது. இன்றைய நிலவரப்படி மொத்தம் 71 பேர் பலியாகியுள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →