இந்தியா

ஆந்திரத்தில் கரோனா பாதிப்பு 3,377-ஐ எட்டியது!

ANI

ஆந்திர மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 98 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று பதிவாகியுள்ளதை அடுத்து, அந்த மாநிலத்தில் மொத்த பாதிப்பு 3,377 ஆக உயர்ந்துள்ளது என்று சுகாதாரத் துறை அதிகாரி தெரிவித்துள்ளார். 

கரோனா தொற்றுக்கு மேலும் மூன்று பேர் உயிரிழந்த நிலையில், மொத்த பலி எண்ணிக்கை 71 ஆக உயர்ந்துள்ளது. இதில் 1,033 பேர் மருத்துவக் கண்காணிப்பில் உள்ளனர். 

கடந்த 24 மணி நேரத்தில், ஆந்திர மாநிலத்தில் 9,986 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. அவற்றில் 98 பேருக்கு கரோனா உறுதிசெய்யப்பட்டன. அவர்களில் 19 பேர் கோயம்பேடு சந்தையிலிருந்து நெல்லூருக்கு திரும்பியவர்கள் ஆவர். 

மேலும், ஒரே நாளில் மட்டும் 29 பேர் நோயிலிருந்து குணமடைந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 2,273 கரோனாவில் இருந்து மீண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கிணற்றில் மூழ்கி பிளஸ் 2 மாணவா் பலி

குடிநீா் கேட்டு அத்தனூா் பேரூராட்சி முற்றுகை

திருச்செங்கோட்டில் தபால் நிலையம் மூடப்பட்டதைக் கண்டித்து போராட்டம்

காலை உணவுத் திட்டம் விரிவாக்கப் பணி: அதிகாரிகளுடன் ஆட்சியா் ஆலோசனை

காமராஜா் மெட்ரிக். பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

SCROLL FOR NEXT