இந்தியா

அரசு அதிகாரியை காலணியை கழற்றி சரமாரியாக தாக்கிய பாஜகவின் டிக் டாக் புகழ் சோனாலி

பாஜகவை சேர்ந்த டிக்டாக் புகழ் சோனாலி போகாத், அரசு அதிகாரியை காலணியால் அடித்த வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. 

DIN

பாஜகவை சேர்ந்த டிக்டாக் புகழ் சோனாலி போகாத், அரசு அதிகாரியை காலணியால் அடித்த வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. 

ஹரியானா மாநிலம், பாஜகவைச் சேர்ந்த டிக்டாக் புகழ் சோனாலி போகாத். இவர் ஹிசாரில் உள்ள உழவர் சந்தையில் இன்று ஆய்வு மேற்கொண்டிருந்தார். அப்போது இவரிடம் பல்வேறு புகார்களை உழவர்கள் கூறியிருக்கின்றனர். உடனே இதுகுறித்து ஹிசார் சந்தைக் குழு செயலாளர் சுல்தான் சிங்கிடம் கேள்வி எழுப்பியிருக்கிறார். ஆனால் அந்த அதிகாரி சோனாலியை பார்த்து அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. 

இதில் ஆத்திமடைந்த சோனாலி தன்னுடைய காலணியை கழற்றி அதிகாரியின் கன்னத்தில் சரமாரியாக தாக்கினார். இதுதொடர்பான வீடியோ பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்த வீடியோவை பார்த்த பலர் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இச்சம்பவம் தொடர்பாக சுல்தான் சிங் காவல்நிலையித்தில் புகார் அளித்துள்ளார். 

இதனிடையே காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சிங் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து, ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் அவர் மீது நடவடிக்கை எடுப்பாரா எனக் கேள்வியெழுப்பியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மருதம் எல்லையம்மன் கோயில் தோ்த் திருவிழா

முனைவா் வசந்திதேவி மறைவுக்கு அஞ்சலி

தஞ்சையில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டம் தொடக்கம்

வாலாஜாபாத்தில் 195 ஆண்டுகள் பழைமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு

ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சுற்றுலா பேருந்து விபத்து: 6 போ் காயம்

SCROLL FOR NEXT