முகப்பு
இந்தியா

உத்தரப் பிரதேசத்தில் லாரி-கார் மோதல்: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் பலி

உத்தரப் பிரதேசத்தில் லாரியும் காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் பலியாகினர். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:45 PM
பகிர்:

உத்தரப் பிரதேசத்தில் லாரியும் காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் பலியாகினர். 

உத்தரப் பிரதேச மாநிலம் பிரதாப்கர் மாவட்டம் நவாப்கஞ்ச் அருகே இன்று லாரியும், காரும் நேருக்கு நேர் மோதியது. இதில் கார் முற்றிலும் சேதமடைந்தது. இந்த சம்பவத்தில் 2 குழந்தைகள் உள்ளிட்ட 9 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

ஒருவர் பலத்த காயமடைந்தார். தகவல் அறிந்து அங்கு விரைந்த காவல்துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். காயமடைந்தவர் மீட்கப்பட்டு உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விபத்துகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. 

ராஜஸ்தானில் இருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் காரில் பிகார் மாநிலம் போஜ்பூரில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க சென்றபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. 
 

முழு கட்டுரையைப் படிக்க →