இந்தியா

பிளாய்டு மரணம்: மண்டியிட்டு போராட்டத்துக்கு ஆதரவளித்த கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ!

DIN

அமெரிக்க கருப்பினத்தவரான ஜார்ஜ் பிளாய்டுக்கு ஆதரவான போராட்டத்தில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கலந்துகொண்டார்.

அமெரிக்காவின் மினிசொட்டா மாகாணம், மினியாபொலிஸ் நகரில் காவல் துறையினரின் பிடியில் இருந்த கருப்பினத்தவரான ஜாா்ஜ் பிளாய்டு உயிரிழந்தார்.

தொடர்ந்து, காவல்துறையினரின் இந்த நடவடிக்கைக்குக் கண்டனம் தெரிவித்து அமெரிக்காவில் பல்வேறு நகரங்களில் போராட்டம் வெடித்துள்ளது. பல்வேறு பகுதிகளில் போராட்டம் வன்முறையாக மாறியுள்ளது.

அமெரிக்கா மட்டுமின்றி உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் நிறவெறிக்கு எதிராக போராட்டம் தொடர்ந்து வருகிறது. 

இந்நிலையில் கனடாவின் தலைநகரான ஒட்டாவாவில் நடைபெற்ற போராட்டத்தில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கலந்து கொண்டார். கருப்பு நிறத்தில் முகக்கவசம் அணிந்து அவர் நிறவெறிக்கு எதிரான தனது எதிர்ப்பை  பதிவு செய்தார். 

மேலும், அங்கிருந்த போராட்டக்காரர்கள் அவரை மண்டியிடக் கூறவே, அவரும் மண்டியிட்டு கோஷம் எழுப்பினார். தொடர்ந்து, போராட்டக்காரர்கள் அவருக்கு நன்றி தெரிவித்துக்கொண்டனர். 

அமரிக்காவின் ஜார்ஜ் பிளாய்டுக்கு நீதி கேட்டு அமெரிக்கர்கள் மண்டியிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பீன்ஸ் கிலோ ரூ.200

உத்திரகாவிரி ஆற்றில் வெள்ளம்: ஒரே இரவில் நிரம்பிய தடுப்பணை

என்எம்சி தலைவா் பெயரில் போலி அழைப்புகள்!

ஜம்மு-காஷ்மீா் பயங்கரவாதத் தாக்குதல்: ஆளுநா் கண்டனம்; பாஜக போராட்டம்

பட்டாக் கத்தியுடன் சுற்றித் திரிந்த 5 போ் கைது

SCROLL FOR NEXT