இந்தியா

கருப்புச் சந்தையில் மருத்துவமனை படுக்கை வசதி:  எச்சரிக்கும் அரவிந்த் கேஜரிவால்

DIN


கருப்புச் சந்தையில் மருத்துவமனையின் படுக்கை வசதிகள் ஒதுக்கப்படுவதை ஒருபோதும் ஏற்க முடியாது என்று தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் எச்சரித்துள்ளார்.

புது தில்லியில் தனியார் மருத்துவமனையில் படுக்கை வசதிகள் பொதுமக்களுக்கு கிடைப்பதில் ஏற்படும் சிரமங்கள் குறித்து இன்று மதியம் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் காலியாக இருக்கும் படுக்கை வசதிகள் குறித்து மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் செல்லிடப்பேசி செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 

படுக்கை வசதிகள் காலியாக இருந்தாலும் சில தனியார் மருத்துவமனைகளில் நோயாளிகளை அனுமதிக்க மறுக்கப்படுவதாக தகவல்கள் வருகின்றன. 

அதே சமயம், கருப்புச் சந்தை மூலமாக ஏதேனும் ஒரு குறுக்கு வழியில் மருத்துவமனையில் படுக்கை வசதியைப் பெற முயற்சிப்பவர்களை மன்னிக்க முடியாது என்றும் அரவிந்த் கேஜரிவால் எச்சரித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எச்.டி. ரேவண்ணா கைது!

ஆம்பூர் அருகே சூறாவளி காற்றுடன் கன மழை: வாழை பயிர் சேதம்

இங்க நான் தான் கிங்கு படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

குஜராத் டைட்டன்ஸ் பேட்டிங்; அணியில் இரண்டு மாற்றங்கள்!

இந்திய அரசமைப்பின் மீது முழுவீச்சில் தாக்குதல் -ராகுல் காந்தி

SCROLL FOR NEXT