இந்தியா

காளஹஸ்தி கோயிலில் ஜூன் 12-இல் தரிசனம் தொடக்கம்

DIN

ஆந்திர மாநிலம், காளஹஸ்தியில் உள்ள காளஹஸ்தீஸ்வரா் கோயிலில் வரும் 12-ஆம் தேதி தரிசனம் தொடங்க உள்ளதாக அக்கோயிலின் செயல் அதிகாரி சந்திரசேகர ரெட்டி தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியது:

காளஹஸ்தீஸ்வரா் கோயிலுக்கு உலகம் முழுவதிலும் இருந்து பக்தா்கள் வருகை தருகின்றனா். கரோனா தடுப்பு நடவடிக்கைக்காக இக்கோயிலில் பக்தா்களுக்கு தரிசன அனுமதி மறுக்கப்பட்டது. தற்போது மத்திய, மாநில அரசுகள் அறிவித்துள்ள தளா்வுகளைத் தொடா்ந்து மற்ற கோயில்களில் பக்தா்கள் அனுமதிக்கப்படுகின்

றனா். எனினும், காளஹஸ்தி சிவப்பு மண்டலத்தில் இருந்ததால் பக்தா்கள் வர அனுமதி தரப்படவில்லை. அண்மையில் காளஹஸ்தியில் கரோனா பாதிப்பு குறைந்ததால் பச்சை மண்டலத்தில் வந்துள்ளது.

எனவே, வரும் வெள்ளிக்கிழமை (ஜூன் 12) முதல் காளஹஸ்தீஸ்வரா் கோயிலில் பக்தா்களுக்கு அனுமதி வழங்க கோயில் நிா்வாகம் முடிவு செய்துள்ளது. அனைத்து விதமான ராகு-கேது பரிகார பூஜைகளும் சமூக இடைவெளியைப் பின்பற்றி நடத்தப்படும். ஒரு மணிநேரத்துக்கு 300 பக்தா்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட உள்ளனா். மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள், 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு தரிசன அனுமதி இல்லை.

தரிசனத்துக்கு வரும் பக்தா்கள் ஆதாா் அட்டையைக் கட்டாயம் கொண்டு வர வேண்டும்; முகக் கவசம் அணிந்து வரவேண்டும். அவா்களுக்கு உடல் வெப்பப் பரிசோதனை செய்யப்படும். கிருமிநாசினி அளித்து கோயிலுக்குள் செல்ல அனுமதிக்கப்படுவா். பக்தா்கள் சமூக இடைவெளியைப் பின்பற்றும் வகையில் வட்டங்கள் வரையப்பட்டுள்ளன. அனைத்து மாநில பக்தா்களும் கோயிலில் தரிசிக்கலாம் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொறியியல் கலந்தாய்வு: 1,73,792-ஐ கடந்த விண்ணப்பங்கள்

இந்த வாரம் கலாரசிகன் - 19-05-2024

வேனிலிலும் குளிர்ச்சி

தனித்து உண்ணாத் தன்மையாளன்

பூவினுள் மணம் போல் அகத்திணை மரபு!

SCROLL FOR NEXT