இந்தியா

இந்தியாவில் கரோனா சமூகப் பரவல் நிலையை எட்டவில்லை: ஐ.சி.எம்.ஆர்

ANI

புது தில்லி: இந்தியாவில் கரோனா சமூகப் பரவல் நிலையை எட்டவில்லை என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் (ஐ.சி.எம்.ஆர்) தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக ஐ.சி.எம்.ஆரின் செயல் இயக்குநரான டாக்டர் பலராம் பார்கவா தில்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசும்போது கூறியதாவது:

இத்தனைப் பெரிய நாடான இந்தியாவில் கரோனா பரவல் வீதம் வெகு குறைவாகவே உள்ளது. நாங்கள் பார்த்த வரையில் சிறு மாவட்டங்களில்  பரவல் வீதம் ஒரு சதவீதத்திற்கு குறைவாகவும், நகரப் பகுதிகளில் ஒரு சதவீதத்திற்கு சற்று கூடுதலாகவும் காணப்படுகிறது. தடுப்பு பகுதிகளில் இது சற்றுக் கூடுதலாக  இருக்கலாம்.  

இந்தியா தொடர்ந்து கரோனா பரிசோதனை, தொடர்புகளைக் கண்டறிதல், பின்தொடர்தல், தனிமைப்படுத்துதல் என்ற வழிமுறையை பின்பற்ற வேண்டும். எந்த சூழ்நிலையிலும் நாம் எச்சரிக்கை உணர்வினைக் குறைத்துக் கொள்ளக் கூடாது.

தற்போது நாம் ஒரு நாளைக்கு 1.5 லட்சம் சோதனைகளை செய்து வருகிறோம். இதனை விரைவில் 2 லட்சமாக அதிகரிக்க இயலும். 50 லட்சம் என்ற சோதனை இலக்கை சமீபத்தில்தான் அடைந்திருக்கிறோம்.

மாநில அரசுகள் கரோனா பரிசோதனைக்கு அரசு மற்றும் தனியார் சோதனை மையங்களின் சேவையை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘இங்க நான்தான் கிங்கு’ முதல்நாள் வசூல் எவ்வளவு?

இன்ஜினில் தீ: பெங்களூருவில் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்

தேசிய ஆடை தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை வேண்டுமா?

ஆர்சிபிக்கு எதிரான போட்டி எம்.எஸ்.தோனியின் கடைசி போட்டியல்ல: சிஎஸ்கே முன்னாள் வீரர்

கந்தர்வக் குரலோன்..! பிறந்தநாள் வாழ்த்துகள் சித் ஸ்ரீராம்

SCROLL FOR NEXT