இந்தியா

இந்தியாவில் கரோனா தொற்றிலிருந்து மீள்வோர் எண்ணிக்கை 50 சதவீதமாக அதிகரிப்பு

DIN

புது தில்லி: இந்தியாவில் கரோனா தொற்றிலிருந்து மீள்வோர் எண்ணிக்கை 50 சதவீதமாக அதிகரித்துள்ளதாக, மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.  

இந்தியாவில் கரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது வரை இந்தியாவில் 3,21,963 பேர் கரோனா நோய் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். அதேநேரம் கரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 9,204 ஆக உள்ளது.

இந்நிலையில் இந்தியாவில் கரோனா தொற்றிலிருந்து மீள்வோர் எண்ணிக்கை 50 சதவீதமாக அதிகரித்துள்ளதாக, மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.  

இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை ஞாயிறு மாலை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘இந்தியாவில் கரோனா தொற்றிலிருந்து மீள்வோர் எண்ணிக்கை 50 சதவீதமாக அதிகரித்துள்ளது. கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை- 3,22,612 ஆகவும், கரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை- 1,62,594 ஆகவும் உள்ளது’ என்று தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு: சென்னையில் தொழிலாளி பலி

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவம்: கொடியேற்றத்துடன் தொடங்கியது!

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமல் பாய்ஸ்!

SCROLL FOR NEXT