உத்தரப் பிரதேசத்தின் முசாபர்நகர் மாவட்டத்தில் புலம்பெயர்ந்த பெண் ஒருவர் சொந்த ஊருக்குத் திரும்பும்போது அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
இமாச்சலப் பிரதேசத்திலிருந்து தனது சொந்த ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது புலம்பெயர்ந்த பெண்ணுக்கு, ஞாயிற்றுக்கிழமை மாலை மிரான்பூர் நகருக்கு அருகிலுள்ள காதிமா-பானிபட் நெடுஞ்சாலையில், தனது கணவருடன் படான் மாவட்டத்திற்கு லாரி ஒன்றில் சென்று கொண்டிருந்த போது திடீரென பிரசவ வலி ஏற்பட்டது.
இதையடுத்து, அருகிலுள்ள ஜான்சத் ஆரம்பச் சுகாதார மையத்திற்கு கொண்டுசெல்லப்பட்ட நிலையில், அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. தற்போது தாயும், சேயும் நலமாக இருப்பதாகச் சுகாதார மைய பொறுப்பாளர் அசோக் குமார் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.