கோப்புப்படம் 
இந்தியா

ஜம்மு-காஷ்மீரில் தொடா்ந்து மூன்றாவது நாளாக நிலநடுக்கம்

ஜம்மு-காஷ்மீரில் தொடா்ந்து மூன்றாவது நாளாக செவ்வாய்க்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டது.

DIN

ஜம்மு-காஷ்மீரில் தொடா்ந்து மூன்றாவது நாளாக செவ்வாய்க்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலடுக்கம் ரிக்டா் அளவு கோலில் 5.8 ஆக பதிவானது. இதனால் பொருள் சேதமோ, உயிரிழப்போ ஏற்படவில்லை.

காலை 7 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் தஜிகிஸ்தானை மையம் கொண்டிருந்தது. ஜம்மு-காஷ்மீா் பள்ளத்தாக்கு பகுதியான ஸ்ரீநகா், கிஸ்துவாா், தோடாவில் நிலநடுக்கம் அதிகம் உணரப்பட்டது. ஜம்முவிலும் நில அதிா்வு இருந்தது.

முன்னதாக, ஞாயிறு மற்றும் திங்கள்கிழமையிலும் ஜம்மு-காஷ்மீரில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கங்களிலும் உயிரிழப்போ, பொருள் சேதங்களோ ஏற்படவில்லை. எனினும், தொடா்ந்து நிலநடுக்கம் ஏற்பட்டு வருவது அப்பகுதி மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

178 ரன்கள், 7 விக்கெட்டுகள்... சாதனையுடன் சொந்த ஊரில் ஆட்ட நாயகனான அலெக்ஸ் கேரி!

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் விஜய் நாளை பங்கேற்பு!

100க்கு 100 புள்ளிகள்... டபிள்யூடிசி தரவரிசையில் முதலிடத்தில் நீடிக்கும் ஆஸி.!

இறந்த குழந்தையை பையில் கொண்டு சென்ற அவலம்!

பிக் பாஸ் 9: சூடுபிடிக்கும் போட்டி! இந்த வாரமும் இருவர் வெளியேற்றம்!!

SCROLL FOR NEXT