இந்தியா

கரோனாவிலிருந்து குணமடைவோர் விகிதம் 52.47 சதவிகிதம்: மத்திய அரசு

​இந்தியாவில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றிலிருந்து குணமடைவோர் விகிதம் 52.47 சதவிகிதமாக அதிகரித்துள்ளதாக மத்திய மக்கள் நல்வாழ்வு மற்றும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

DIN


இந்தியாவில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றிலிருந்து குணமடைவோர் விகிதம் 52.47 சதவிகிதமாக அதிகரித்துள்ளதாக மத்திய மக்கள் நல்வாழ்வு மற்றும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுபற்றி அமைச்சகம் இன்று (செவ்வாய்கிழமை) வெளியிட்ட பத்திரிகை செய்தி:

"கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 10,215 பேர் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். இதுவரை மொத்தம் 1,80,012 பேர் குணமடைந்துள்ளனர். இதைத் தொடர்ந்து குணமடைவோர் விகிதம் 52.47 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. இது கரோனா தொற்றால் மொத்தம் பாதிக்கப்பட்டவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் குணமடைந்துள்ளனர் என்பதை வெளிப்படுத்துகிறது.

தற்போதைய நிலையில், 1,53,178 பேர் மருத்துவக் கண்காணிப்பில் சிகிச்சையில் உள்ளனர்."

கடந்த 24 மணி நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை விவரங்கள் பற்றி இந்த வெளியீட்டில் குறிப்பிடவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இம்ரான் கானுக்கு 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை: நாடு தழுவிய போராட்டத்துக்கு ஆதரவாளர்களுக்கு அழைப்பு!

கிறிஸ்துமஸ் விடுமுறை: 891 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

மகாராஷ்டிர உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள்: பெரும்பான்மை இடங்களில் பாஜக வெற்றி!

திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடக்கம்!

ஜனநாயகன் இசைவெளியீடு! இந்திய சினிமாவில் முதல்முறை! | Cinema Updates | Dinamani Talkies

SCROLL FOR NEXT