முகப்பு
இந்தியா

ஜம்மு-காஷ்மீரில் கரோனாவுக்கு மேலும் ஒருவர் பலி: மொத்த உயிரிழப்பு 64 ஆனது

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் சோபியன் மாவட்டத்தைச் சேர்ந்த முதியவர் கரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:48 PM
பகிர்:

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் சோபியன் மாவட்டத்தைச் சேர்ந்த முதியவர் கரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். இந்த நிலையில் அந்த மாநிலத்தில் பலியானோர் எண்ணிக்கை 64 ஆக உயர்ந்துள்ளது என்று அதிகாரிகள் கூறினர். 

தெற்கு காஷ்மீரின், சோபியன் மாவட்டத்தில் பெரிபோரா பகுதியைச் சேர்ந்த 65 வயது முதியவர் இன்று அதிகாலை 4.15 மணியளவில் ஸ்கிம்ஸ் மருத்துவமனை மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். 

அவருக்கு ஏற்கெனவே காய்ச்சல் மற்றும் மூச்சுத் திணறல் இருந்த நிலையில் கடந்த திங்களன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், அவருக்கு கரோனா பரிசோதனை செய்ததில், தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். 

முழு கட்டுரையைப் படிக்க →