இந்தியா

வீரர்களின் தியாகத்தையும், துணிச்சலையும் நாடு ஒருபோதும் மறக்காது: ராஜ்நாத் சிங் இரங்கல்

DIN

லடாக் எல்லையில் சீனப் படைகளுடனான மோதலில் இந்திய வீரர்கள் உயிரிழந்தது மன வேதனை அளிப்பதாக அமைச்சர் ராஜ்நாத் சிங் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார்.

கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் திங்கள்கிழமை இரவு இந்திய-சீனப் படைகள் இடையே ஏற்பட்ட கடும் மோதலில் இந்திய ராணுவத்தின் கர்னல் உள்பட ராணுவத்தினர் 20 பேர் வீர மரணம் அடைந்துள்ளனர். இதனால் எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது. 

சீனப் படைகளுடனான மோதலில் ராணுவ வீரர்களின் வீர மரணத்துக்கு பிரதமர் உள்பட பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். தொடர்ந்து பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில், 

'லடாக் எல்லையில் வீர மரணமடைந்த ராணுவ வீரர்களின் தியாகத்தையும்,  துணிச்சலையும் நாடு ஒருபோதும் மறக்காது.  உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவிப்பதோடு, உயிரிழந்த வீரர்களின் குடும்பத்தினருக்கு ஆதரவாக இந்த நாடே துணை நிற்கும்.

வீரர்களை இழந்ததது மன உளைச்சலையும், வேதனையையும் தருகிறது. வீரர்கள் கடமையில் அளப்பரிய வீரத்தை வெளிப்படுத்தினர். இந்திய மண்ணைக் காப்பாற்ற அவர்கள் இன்னுயிரை தியாகம் செய்துள்ளனர்' என்று பதிவிட்டுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

SCROLL FOR NEXT