இந்தியா

நிலக்கரி சுரங்கங்களை ஏலம் விடும் பணியை தொடக்கி வைத்தார் பிரதமர் மோடி

ANI


புது தில்லி: நாட்டில் உள்ள 41 நிலக்கரி சுரங்கங்களை ஏலம் விடும் பணியை பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்து உரையாற்றினார்.

முன்னதாக, நாட்டில் நிலக்கரி சுரங்கங்களை தனியார் நிறுவனங்கள் பயன்படுத்தும் வகையில் ஏலம் விடப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்தார்.

அதன்படி, இன்று 41 நிலக்கரி சுரங்கங்களை ஏலம் விடும் பணியை பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்து உரையாற்றினார்.

அப்போது அவர் கூறியதாவது, நிலக்கரித் துறை வளர்ச்சிக்கு போடப்பட்ட பூட்டு இன்று உடைக்கப்பட்டுள்ளது. போட்டிகளுக்கு வெளியே இதுவரை நிலக்கரி துறை இருந்து வந்தது. இதனால், வெளிப்படைத் தன்மையிலும் குறைபாடு இ ருந்தது. 2014-ம் ஆண்டுக்குப் பிறகு எடுக்கப்பட்ட பல்வேறு நடவடிக்கைகள் காரண்மாக தற்போதுஅந்தநிலை மாறியுள்ளது. மத்திய அரசு எடுத்த பல்வேநு நடவடிக்கைகள் காரணமாக நிலக்கரித்துறை பலப்படுத்தப்பட்டுள்ளது என்று கூறினார்.

மேலும், நாம் இறக்குமதி செய்யும் பொருள்களை நாமே தயாரித்து ஏற்றுமதி செய்யும் நிலையை உருவாக்க வேண்டும். கரோனா தொற்றால் ஏற்பட்ட நெருக்கடி நிலையை இந்தியா, நல்வாய்ப்பாக மாற்றி வருகிறது என்றும் மோடி தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிக விக்கெட்டுகள்: தமிழக வீரர் நடராஜன் முதலிடம்!

ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி பலி: விசாரணைக்கு ரயில்வே உத்தரவு

பாகிஸ்தான் பேருந்து விபத்தில் 20 பேர் பலி

தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.800 குறைந்தது

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

SCROLL FOR NEXT