இந்தியா

மாநிலங்களவைத் தேர்தல்: ஆந்திரத்தில் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி வாக்களித்தார்

ஆந்திரத்தில் காலியாக உள்ள 4 இடங்களுக்கு நடைபெற்று வரும் மாநிலங்களவைத் தேர்தலில் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி வாக்களித்தார். 

DIN

ஆந்திரத்தில் காலியாக உள்ள 4 இடங்களுக்கு நடைபெற்று வரும் மாநிலங்களவைத் தேர்தலில் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி வாக்களித்தார். 

நாடு முழுவதும் 17 மாநிலங்களில் காலியாக உள்ள 55 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கு தேர்தல் நடத்தப்படும் என பிப்ரவரி மாதம் தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதில் தமிழகம் உள்பட 10 மாநிலங்களில் 36 உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். மீதமுள்ள 19 உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் 8 மாநிலங்களில் இன்று நடைபெற்று வருகிறது. 

இதில் ஆந்திரத்தில் காலியாக உள்ள 4 இடங்களுக்கு மாநிலங்களவைத் தேர்தல் நடைபெற்று வருகிறது. அமராவதியில் மாநில சட்டமன்றத்தில் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி வாக்களித்தார். தொடர்ந்து, எம்.எல்.ஏ.க்களும் வாக்களித்து வருகின்றனர். 

அதேபோன்று ஆந்திரத்தின் முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடுவும் சட்டமன்றத்துக்கு வந்து வாக்களித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மிதுன ராசிக்கு மனகுழப்பம் தீரும்: தினப்பலன்கள்!

உற்பத்தித் துறையில் 16 மாதங்கள் காணாத வளா்ச்சி

மாமல்லபுரத்தில் கைவினைப் பொருள்கள் கண்காட்சி

ஆடி வெள்ளி: அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு

பிளஸ் 2 தோ்ச்சி பெற்ற 80 சதவீத மாணவா்கள் உயா்கல்வியில் சோ்க்கை

SCROLL FOR NEXT