கோப்புப் படம் 
இந்தியா

தில்லியில் இன்று ஒரே நாளில் 3,000 பேருக்கு கரோனா; 63 பேர் பலி

தில்லியில் இன்று ஒரே நாளில் 3,000 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

DIN

தில்லியில் இன்று ஒரே நாளில் 3,000 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இந்தியாவில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கையானது 4 லட்சத்தைக் கடந்துவிட்டது. இதுவரை இல்லாத அளவில் கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக 15,413 பேருக்கு தொற்று உறுதியானதால், பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 4,10,461-ஆக உயர்ந்துள்ளது. மேலும் கரோனாவால் கடந்த 24 மணிநேரத்தில் 307 போ் பலியாகியுள்ளனர்.

இதையடுத்து, நாட்டில் ஒட்டுமொத்த பலி எண்ணிக்கையானது 13,254-ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் தில்லியில் இன்று ஒரே நாளில் 3,000 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தில்லி சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இத்துடன் அங்கு ஒட்டுமொத்த பாதிப்பு எண்ணிக்கை 59,746ஆக உயர்ந்துள்ளது.

மேலும் இன்று மட்டும் 63 பேர் கரோனாவால் பலியாகியுள்ளனர். இதன்மூலம் ஒட்டுமொத்த பலி எண்ணிக்கை 2,175ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம் கரோனா பாதிப்பில் இருந்து 33,013 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வியப்பில் ஆழ்த்திய கிறிஸ்டோஃபர் நோலனின் ஒடிசி முன்னோட்டம்!

மோசமான ஃபார்மிலிருந்து கண்டிப்பாக மீண்டு வருவேன்: சூர்யகுமார் யாதவ்

தரையிறங்க முடியாமல் திரும்பிய மோடியின் ஹெலிகாப்டர்! | செய்திகள்: சில வரிகளில் | 20.12.25

நாளை (டிச.21) திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

எஸ்ஐஆர் எதற்காக..? - பிரதமர் மோடி விளக்கம்!

SCROLL FOR NEXT