முகப்பு
இந்தியா

தில்லியில் புதிதாக 2,909 பேருக்கு கரோனா தொற்று

​தில்லியில் இன்று (திங்கள்கிழமை) புதிதாக 2,909 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:49 PM
​தில்லியில் இன்று (திங்கள்கிழமை) புதிதாக 2,909 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. (கோப்புப்படம்)
பகிர்:


தில்லியில் இன்று (திங்கள்கிழமை) புதிதாக 2,909 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தில்லியில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர், பலியானோர் பற்றிய தில்லி சுகாதாரத் துறையின் செய்திக் குறிப்பு வெளியாகியுள்ளது. இதன்படி, அங்கு புதிதாக 2,909 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் 58 பேர் பலியாகியுள்ளனர்.

அதேசமயம், இன்று ஒரேநாளில் 3,589 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதைத் தொடர்ந்து அங்கு மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 62,655 ஆக உயர்ந்துள்ளது. இதில் 36,602 பேர் குணமடைந்துள்ளனர். மொத்தம் 2,233 பேர் பலியாகியுள்ளனர்.

இன்றைய தேதியில் 23,820 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

முழு கட்டுரையைப் படிக்க →