இந்தியா

தாராவியில் புதிதாக 14 பேருக்கு கரோனா

DIN


மும்பை தாராவிப் பகுதியில் இன்று (திங்கள்கிழமை) புதிதாக 14 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரம் மற்றும் தாராவியில் கரோனா தொற்றால் புதிதாக பாதித்தோர், பலியானோர் உள்ளிட்ட எண்ணிக்கை பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

மகாராஷ்டிரம்:

மகாராஷ்டிரத்தில் புதிதாக 3,721 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் 62 பேர் பலியாகியுள்ளனர். 1,962 பேர் குணமடைந்துள்ளனர். இதைத் தொடர்ந்து அங்கு மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 1,35,796 ஆக உயர்ந்துள்ளது. மொத்தம் 6,283 பேர் பலியாகியுள்ளனர், 61,793 பேர் குணமடைந்துள்ளனர்.

தாராவி:

ஆசியாவின் மிகப் பெரிய குடிசைப் பகுதியான மும்பை தாராவியில் புதிதாக 14 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அங்கு மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 2,184 ஆக உயர்ந்துள்ளது. ஒரு கட்டத்தில் ஹாட்ஸ்பாட்டாக இருந்த தாராவிப் பகுதியில் கடந்த 24 மணி நேரத்தில் யாரும் பலியாகவில்லை. இதன்மூலம் பலி எண்ணிக்கை 80 ஆகவே உள்ளது. மொத்தம் பாதித்தோரில் 1,060 பேர் குணமடைந்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ப்ளே ஆஃப் வாய்ப்பை தக்க வைக்குமா கொல்கத்தா?

தமிழ்க் காதல் பாடல்கள் தமிழ் அகப் பாடல்கள் - பொருள் விளக்கம்

ஏன் இத்தனை பதற்றத்தை ஏற்படுத்துகிறீர்கள்?

பர்மா - ஓர் அரசியல் வரலாறு

விழிகளில் ஒளியேற்றும் சங்கர நேத்ராலயா

SCROLL FOR NEXT