இந்தியா

மகாராஷ்டிரத்தில் புதிதாக 55 காவலர்களுக்கு கரோனா

DIN


மகாராஷ்டிரத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 55 காவலர்களுக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுபற்றி மகாராஷ்டிர காவல் துறை திங்கள்கிழமை தெரிவித்ததாவது:

"மகாராஷ்டிரத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 55 காவலர்களுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 48 காவலர்கள் கரோனா தொற்றால் பலியாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து, மகாராஷ்டிரத்தில் கரோனா தொற்றால் பாதித்தோர் எண்ணிக்கை 4,103 ஆக உயர்ந்துள்ளது. இதில் 1,016 பேர் சிகிச்சையில் உள்ளனர். 3,039 காவலர்கள் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்."

இதனிடையே மாநில ரிசர்வ் காவல் படையைச் சேர்ந்தவர் மும்பையில் ஜூன் 21-ஆம் தேதி பலியானார். மாநில ரிசர்வ் காவல் படையிலிருந்து கரோனா தொற்றுக்கு பலியான முதல் நபர் இவர்.

இந்தியாவில் கரோனா தொற்றால் அதிகம் பாதிப்புக்குள்ளாகியுள்ள மாநிலமாக மகாராஷ்டிரம் இருந்து வருகிறது. மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்தின்படி, அங்கு 1,32,075 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர், 6,170 பேர் பலியாகியுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புணே படகு விபத்து: 5 சடலங்கள் மீட்பு

ஆட்டு ரத்தம் குடித்த பூசாரி பலி

இஸ்ரேல் இனியும் தாமதிக்கக் கூடாது : பிணைக்கைதிகளின் குடும்பத்தினர் கோரிக்கை!

சர்வாதிகார அரசை அகற்றுவதே குறிக்கோள்: காங்கிரஸ்

ராணுவ அதிகாரிப் பணிக்கான என்டிஏ தேர்வு: யுபிஎஸ்சி அறிவிப்பு

SCROLL FOR NEXT