இந்தியா

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 14,821 பேருக்கு கரோனா தொற்று உறுதி

DIN

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 14,821 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

கரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவிலும் கரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதனால் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு 5ஆவது முறையாக ஜூன் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்தியாவில் கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 4,10,461லிருந்து 4,25,282 ஆக உயர்ந்துள்ளது. 

இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், நாட்டில் கடந்த கடந்த 24 மணிநேரத்தில் 14,821 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இத்துடன் ஒட்டுமொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,10,461லிருந்து 4,25,282 ஆக உயர்ந்துள்ளது. அவர்களில் 1,74,387 பேர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர்.

மேலும் கரோனாவுக்கு கடந்த 24 மணிநேரத்தில் 445 பலியாகியுள்ளனர். இதன்மூலம் ஒட்டுமொத்த பலி எண்ணிக்கை 13,254லிருந்து 13,699 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம் கரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் 2,27,756லிருந்து 2,37,196 ஆக உயர்ந்துள்ளது. நாட்டிலேயே அதிகபட்சமாக கரோனாவால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை ஒரு லட்சத்தை 32 ஆயிரித்தை தாண்டியுள்ளது.

மேலும் அங்கு கரோனா பாதிப்பில் இருந்து 65,744 பேர் குணமடைந்துள்ள நிலையில், 6,170 பேர் பலியாகியுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதிய ஐபேட் விலை என்ன?

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

SCROLL FOR NEXT