மும்பை தாராவிப் பகுதியில் இன்று (செவ்வாய்க்கிழமை) 5 பேருக்கு மட்டுமே கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 
இந்தியா

தாராவியில் இன்று வெறும் 5 பேருக்கு மட்டுமே கரோனா உறுதி

மும்பை தாராவிப் பகுதியில் இன்று (செவ்வாய்க்கிழமை) 5 பேருக்கு மட்டுமே கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

DIN


மும்பை தாராவிப் பகுதியில் இன்று (செவ்வாய்க்கிழமை) 5 பேருக்கு மட்டுமே கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மும்பை கரோனா நிலவரம்:

மும்பையில் இன்று புதிதாக 846 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 42 பேர் பலியாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து அங்கு மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 68,481 ஆக உயர்ந்துள்ளது. மொத்தம் 3,842 பேர் பலியாகியுள்ளனர்.

அதேசமயம், இன்று 457 குணமடைந்து வீடு திரும்பியதையடுத்து, மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 34,576 ஆக உயர்ந்துள்ளது. 30,063 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தாராவி:

ஆசியாவின் மிகப் பெரிய குடிசைப் பகுதியான மும்பை தாராவியில் கடந்த சில நாள்களாக கரோனாவால் பாதிப்புக்குள்ளாவோரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இந்த நிலையில், இன்று 5 பேருக்கு மட்டுமே கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏப்ரல் 5-ஆம் தேதிக்குப் பிறகு ஒரு நாளில் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டவர்களின் குறைந்தபட்ச எண்ணிக்கை இதுவாகும்.

இதைத் தொடர்ந்து அங்கு மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 2,189 ஆக உயர்ந்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் 7,01,871 வாக்காளா்கள் நீக்கம்

ஓமந்தூராா் மருத்துவமனையில் 20,000 இதய இடையீட்டு சிகிச்சை: மருத்துவக் குழுவினருக்கு அமைச்சா் மா.சுப்பிரமணியன் பாராட்டு

முதல்வா் ஸ்டாலினின் கொளத்தூா் தொகுதியில் ஒரு லட்சம் போ் நீக்கம்

நீதி, துணிவுக்கான சமகால சான்று சென்னை உயா்நீதிமன்றம்: நீதிபதி எம்.எஸ்.ரமேஷ்

தடை விதிக்கப்பட்ட நாய்களை வளா்த்தால் ரூ.1 லட்சம் அபராதம்: சென்னை மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் தீா்மானம்

SCROLL FOR NEXT