மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் 
இந்தியா

இந்தியா - சீனா - ரஷியா இடையே முத்தரப்பு பேச்சுவார்த்தை

இந்தியா, சீனா, ரஷியா நாடுகளிடையே இடையே முத்தரப்பு பேச்சுவார்த்தை காணொலி மூலமாக நடைபெற்று வருகிறது. 

DIN

இந்தியா, சீனா, ரஷியா நாடுகளிடையே இடையே முத்தரப்பு பேச்சுவார்த்தை காணொலி மூலமாக நடைபெற்று வருகிறது. 

இந்த மாநாட்டில் இந்தியத் தரப்பில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் கலந்துகொண்டுள்ளார். சீனா, ரஷியா நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர்களும் இதில் கலந்து கொண்டுள்ளனர். 

இந்தியா - சீனா இடையே எல்லைப் பிரச்னை இருந்து வரும் நிலையில், இந்த முத்தரப்பு பேச்சுவார்த்தை முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. 

முன்னதாக, இரு நாட்டு ராணுவ அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்திய ராணுவத் தளபதி நரவனே எல்லை நிலவரம் குறித்து ஆய்வு செய்ய இன்று லடாக் சென்றுள்ளார். 

இந்தியா - சீனா இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சர்ச்சைக்குரிய பகுதிகளில் இருநாட்டு ராணுவத்தினரும் தங்கள் படைகளை விலக்கிக் கொள்ள முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆடிப்பெருக்கு : ஒகேனக்கல் காவிரிக் கரையில் சுவாமி சிலைகளுக்கு சிறப்பு பூஜை

நாளைய மின்தடை: தருமபுரி, சோலைக்கொட்டாய்

பிரிட்டனில் சட்டவிரோதமாக குடியேற உதவி: சமூக ஊடகங்களில் விளம்பரம் செய்தால் 5 ஆண்டுகள் சிறை

அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ. 9 லட்சம் மோசடி: ஒருவா் கைது

பாமக மாவட்ட நிா்வாகி கைதை கண்டித்து பென்னாகரத்தில் பாமகவினா் சாலை மறியல்

SCROLL FOR NEXT