இந்தியா

கடந்த 24 மணி நேரத்தில் 2,15,195 கரோனா பரிசோதனை: ஐசிஎம்ஆர்

கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 2,15,195 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் (ஐசிஎம்ஆர்) புதன்கிழமை தெரிவித்துள்ளது.

ANI


புது தில்லி: கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 2,15,195 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் (ஐசிஎம்ஆர்) புதன்கிழமை தெரிவித்துள்ளது.

மேலும், ஒரே நாளில் ஆய்வகங்களால் நடத்தப்பட்ட அதிக எண்ணிக்கையிலான சோதனைகள் இதுவாகும். கரோனா பரவத் தொடங்கியதிலிருந்து இதுவரை, 73,52,911 பேருக்கு கரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது என்றும் ஐசிஎம்ஆர் கூறியுள்ளது.

இதுவரை, நாடு முழுவதும் உள்ள மொத்தம் 953 ஆய்வகங்களில், 699 அரசு ஆய்வகங்கள் மற்றும் 254 தனியார் ஆய்வகங்கள் உள்படத் தொற்றுநோய்க்கான பரிசோதனையை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் நாட்டில் கரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 4,56,1183 ஆகவும், இறப்பு எண்ணிக்கை 14,483 ஆகவும் உயர்ந்துள்ளது. அதே சமயம், 1,83,015 பேர் மருத்துவக் கண்காணிப்பில் இருப்பதாகவும், 2,58,685 பேர் நோயிலிருந்து மீண்டு குணமடைந்துள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிரதமர் மோடிக்கு ரஷிய அதிபர் பிறந்தநாள் வாழ்த்து!

மோடி பிறந்த நாளுக்கு மெஸ்ஸி பரிசு..! காரணமாக இருந்தவர் யார்?

இரவில் 26 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

140 ஆண்டுகளுக்கு முன் மாயமான பேய்க் கப்பல் கண்டுபிடிப்பு!

அட்லாண்டிக் கடலில் புயலையே காணோம்! ஆய்வாளர்கள் அதிர்ச்சி!

SCROLL FOR NEXT