மாதிரிப்படம் 
இந்தியா

சிறுமி பாலியல் பலாத்காரம்: ஹைதராபாத் காவலர் கைது

பன்னிரண்டு வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக ஹைதராபாத்தில் காவலர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்

IANS

ஹைதராபாத்: பன்னிரண்டு வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக ஹைதராபாத்தில் காவலர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹைதராபாத் அருகேயுள்ள போவன்பள்ளி காவல்நிலைய எல்லைக்குட்பட்ட சிக் கிராமத்தைச் சேர்ந்தவர் உமேஷ் (33). .அருகில் உள்ள ராம்கோபால்பேட் காவல்நிலையத்தில் காவலராகப் பணியாற்றி வருகிறார். இவர் இரண்டு மாதங்களுக்கு முன்னர் தனது பக்கத்து வீட்டில் வசிக்கும் தனது தூரத்து உறவினரான 12 வயது சிறுமி ஒருத்தியை, அவள் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சென்று பேசி, தனது வீட்டிற்கு வரவழைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதை வெளியில் சொன்னால், அவளைக் கொன்று விடுவதாகவும் மிரட்டியுள்ளார்.

ஆனால் தற்போது சிறுமி இதைத் தனது தாயாரிடம் சொல்ல, அவர் அங்குள்ள தன்னார்வக் குழு ஒன்றின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார். அதன் மூலம் காவல்துறை உயர் அதிகாரிகளிடம் இந்த விவகாரம் சென்றுள்ளது.

இதையடுத்து வியாழன்று அந்த சிறுமியின் தாயார் காவல்நிலையத்தில் புகார் கொடுக்க, உமேஷ் இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகள் மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தத் தகவலை ஹைதராபாத் காவல்துறை ஆணையர் அஞ்சனி குமார் செய்தியாளர்களிடம் தெரவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வாக்கு வங்கியை அதிகரிக்க பாஜக தில்லுமுல்லு: அமைச்சா் துரைமுருகன்

இசையே முக்கியம்...

விவசாயம் சார்ந்த கதை

அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.20.70 லட்சம் மோசடி

பேல் பூரி

SCROLL FOR NEXT