இந்தியா

ஜூலை 15 வரை சர்வதேச பயணிகள் விமான சேவை ரத்து

DIN

கரோனா தடுப்பு நடவடிக்கையாக ஜூலை 15 வரை சர்வதேச பயணிகள் விமான சேவை முழுவதும் ரத்து செய்யப்படுவதாக மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது. 

அதாவது, வருகிற ஜூலை 15 வரை சர்வதேச அளவில் திட்டமிடப்பட்டுள்ள அனைத்து பயணிகள் விமான சேவை ரத்து செய்யப்படுவதாகவும், அதே நேரத்தில் வெளிநாட்டில் சிக்கியுள்ள இந்தியர்களை தாயகம் அழைத்து வரும் 'வந்தே பாரத்' திட்டம் உள்ளிட்ட சிறப்பு விமான சேவை தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், சரக்கு சேவை விமானங்களுக்கு இந்த விதிமுறைகள் பொருந்தாது என்றும், சூழ்நிலைக்கு தகுந்தவாறு படிப்படியாக விமான சேவை பின்னர்  அனுமதிக்கப்படும் என்றும் விமான போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேகமலையில் வறண்டு அணைகள்: சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்

லாரி மோதியதில் பொறியாளா் பலி

ராஜபாளையம் முத்தாலம்மன் கோயிலில் பொங்கல் திருவிழா

மெய்கண்டீஸ்வரா் கோயி சிறப்பு அலங்காரத்தில் சுப்பிரமணியா்

அமாவாசையையொட்டி அங்காளம்மன் கோயிலில் சிறப்பு பூஜை

SCROLL FOR NEXT