இந்தியா

வெட்டுக்கிளி தாக்குதலால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு மத்திய அரசு உதவ வேண்டும்: ராகுல் காந்தி

DIN

வெட்டுக்கிளி தாக்குதலால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு மத்திய அரசு உதவ வேண்டும் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார். 

பாகிஸ்தானிலிருந்து ராஜஸ்தானுக்குள் கடந்த ஏப்ரல் மாதம் பெருங்கூட்டமாக படையெடுத்த வெட்டுக்கிளிகள், அந்த மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு பரவின. இதைத் தொடா்ந்து, மத்திய பிரதேசம், குஜராத், மகாராஷ்டிரம், பஞ்சாப், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களுக்கும் வெட்டுக்கிளிகள் பரவின. இந்த மாநிலங்களில், வெட்டுக்கிளிகள் தாக்குதலால் விவசாயப் பயிா்கள் சேதமடைந்துள்ளன. 

இந்த நிலையில் வெட்டுக்கிளி தாக்குதலால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு மத்திய அரசு உதவ வேண்டும் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் தனது டிவிட்டரில், வெட்டுக்கிளிகளால் ராஜஸ்தான், பஞ்சாப், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ஹரியாணா, குஜராத் மற்றும் மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களில் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. 

எனவே, வெட்டுக்கிளிகளால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கும், விவசாயிகளுக்கும் மத்திய அரசு உதவ வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 பொதுத் தேர்வு: விழுப்புரம் மாவட்டத்தில் 93.17% தேர்ச்சி

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் பெயர் அறிவிப்பு!

கேரளம்: விடுதி கட்டடத்தில் இருந்து குதித்து என்ஐடி மாணவர் தற்கொலை

அனைத்து மாவட்டங்களும் 90%-க்கு மேல் தேர்ச்சி!

தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் எப்போது கிடைக்கும்?

SCROLL FOR NEXT