இந்தியா

ஜூலை 1 முதல் குருகிராமில் மால்கள் திறப்பு

DIN

இரண்டு மாதங்களுக்கு பிறகு ஜூலை 1ஆம் தேதி முதல் குருகிராம், ஃபரீதாபாதில் பெரு வணிக வளாகங்கள் (மால்) திறக்கப்படும் என்று ஹரியாணா அரசு அறிவித்துள்ளது.

இதையடுத்து, புதன்கிழமை முதல் சில கட்டுப்பாடுகளுடன் மால்கள் திறக்கப்படும் என்று குருகிராம் மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது. ஃபரீதாபாதில் பெரு வணிக வளாகங்கள் திறப்பதற்கான முடிவு திங்கள்கிழமை கூடும் உயரதிகாரிகள் கூட்டத்தில் எடுக்கப்பட உள்ளது.

முன்னதாக, கரோனா நோய்த் தொற்று பரவலைக் கருத்தில் கொண்டு குருகிராம், ஃபரீதாபாதைத் தவிர, பிற பகுதிகளில் பெரு வணிக வளாகங்கள் 7ஆம் தேதி திறக்க ஹரியாண அரசு அனுமதி அளித்திருந்தது. தற்போது குருகிராம், ஃபரீதாபாதிலும் திறக்க அனுமதி அளித்துள்ளது.

ஹரியாணாவில் இதுவரை கரோனாவுக்கு மொத்தம் 13, 427 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். குருகிராமில் 5,070 பேரும், ஃபரீதாபாதில் 3,325 பேரும் உள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

இந்நிலையில், ஹரியாணா அரசு ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள உத்தரவு குறித்து குருகிராம் மாவட்ட ஆணையா் அமித் கதாரி கூறுகையில், ‘ஹரியணா அரசு குறிப்பிட்டுள்ள கட்டுப்பாடுகளைப் பின்பற்றி பெரு வணிக வளாகங்கள் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றாா்.

பெரு வணிக வளாகங்களில் உள்ள உணவகங்களில் 50 சதவீதம் போ் மட்டும் அமா்ந்து சாப்பிடும் வகையில் இருக்கைகள் அமைக்க வேண்டும் என்றும் சமூக இடைவெளி கடைப்பிடிக்க வேண்டும் என்றும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. திரையரங்குகள், சிறுவா் விளையாட்டு மையங்கள் ஆகியவை தொடா்ந்து மூடப்பட்டிருக்கும் என்றும் கட்டுப்பாடுகளில் தெரிதவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மீண்டும் துபையில் கனமழை: விமான சேவை பாதிப்பு!

இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி 7.4 சதவிகிதம் உயர்வு!

தமிழகத்துக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை! | செய்திகள்: சிலவரிகளில் | 02.05.2024

ஜிம் செல்பவரா நீங்கள்.. மாரடைப்பு குறித்து மருத்துவர்கள் எச்சரிக்கை!

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்!

SCROLL FOR NEXT