இந்தியா

கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 21 பிஎஸ்எஃப் வீரர்களுக்கு கரோனா

ANI

புது தில்லி: இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களுக்கு 21 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக பிஎஸ்எஃப் திங்கள்கிழமை தெரிவித்துள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 21 எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) வீரர்களுக்கு கரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் 18 பேர் ஒரே நாளில் குணமடைந்துள்ளனர் என்று பிஎஸ்எஃப் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கரோனா பாதிக்கப்பட்ட 655 வீரர்கள் இதுவரை தொற்றிலிருந்து மீண்டுள்ளனர். தற்போது 305 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 19,459 பேருக்குப் புதிதாக கரோனா வைரஸ் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 380 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. 

மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் தகவலின்படி, இந்தியாவில் மொத்தம் 5,48,318 பேர் கரோனாவுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 2,10,120 பேர் சிகிச்சையிலும், 3,21,723 பேர் குணமடைந்து வெளியேற்றப்பட்டனர். இதுவரை 16,475 இறப்புகள் பதிவாகியுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இருதரப்பினரிடையே கடும் மோதல்: கடைகளுக்கு தீ வைப்பு - போலீஸார் குவிப்பு!

ஹர ஹர வீரமல்லு படத்தின் டீசர்

டீப் ஃபேக் தொழில்நுட்பம்.. வரைமுறைகள் நிர்னயிக்க நீதிமன்றம் உத்தரவு!

இஸ்ரேலில் வேலை, ரூ.6 லட்சம் பண மோசடி: ஏமாற்றிய நபர் சிக்கியது எப்படி?

மனம் மயக்கும் ரீனா கிருஷ்ணா - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT