இந்தியா

புதுச்சேரியில் மேலும் 42 பேருக்கு கரோனா: பாதிப்பு 690 ஆனது

UNI


புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 42 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 

புதுச்சேரி சுகாதாரத் துறை வெளியிட்ட தகவலின்படி, 

நேற்று ஒரே நாளில் 42 பேருக்கு சோதனை நடத்தியதில் 41 பேருக்கு கரோனா பதிவாகியுள்ளது. அதில், 27 பேர் புதுச்சேரி அரசு மருத்துவக் கல்லூரியிலும், 14 பேர் ஜிப்மரிலும், ஒருவர் விழுப்புரம்  அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், அரசு மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த 7 பேரும், ஜிப்மரைச் சேர்ந்த 3 பேரும் குணமடைந்து வெளியேற்றப்பட்டனர்.

தற்போது அரசு மருத்துவக் கல்லூரியில் 213 பேரும், ஜிப்மரில் 109 பேரும், கரோனா பராமரிப்பு மையத்தில் 52 பேரும், காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் 35 பேரும், யனம் அரசு மருத்துவமனையில் 2 பேரும், மகே அரசு மருத்துவமனையில் ஒருவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், 3 பேர் விழுப்புரம் அரசு மருத்துவமனையில், 2 பேர் கடலூர் மாவட்டத்தில் ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இதுவரை 690 பேர் கரோனாவுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 262 பேர் சிகிச்சை பெற்று வெளியேற்றப்பட்டனர். 11 பேர் உயிரிழந்தனர் மற்றும் 417 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

செந்தில் பாலாஜியின் காவல் ஜூன் 10 வரை நீட்டிப்பு!

மக்களவைத் தேர்தல் நேரலை: தமிழக தொகுதிகளில் அதிகாரபூர்வ வெற்றி அறிவிப்பு!

110 வாக்குகளில் தோல்வியா? காங்கிரஸ் எதிர்ப்பால் மறுஎண்ணிக்கை!

நீலகிரி, தர்மபுரி, தஞ்சாவூர் தொகுதிகளில் திமுக வெற்றி!

உ.பி.: வேட்பாளர்களின் இறுதி நிலவரம் என்ன?

SCROLL FOR NEXT