கோப்புப்படம் 
இந்தியா

இந்திய, சீன ராணுவத்தினர் நாளை 3-ஆவது முறையாக பேச்சுவார்த்தை

​இந்திய, சீன எல்லையில் பதற்றம் நிலவி வரும் நிலையில், இருநாட்டு ராணுவத் தளபதிகள் இடையே நாளை (செவ்வாய்க்கிழமை) 3-ஆவது முறையாக பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

DIN


இந்திய, சீன எல்லையில் பதற்றம் நிலவி வரும் நிலையில், இருநாட்டு ராணுவத் தளபதிகள் நிலையில் நாளை (செவ்வாய்க்கிழமை) 3-ஆவது முறையாக பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுபற்றி தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்ததாவது:

"இந்தியா, சீனா ராணுவத் தளபதிகள் நிலையில் நாளை காலை 10.30 மணிக்கு 3-வது முறையாக பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. கடந்த 2 முறை சீனாவின் மோல்டோவில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த முறை இந்தியாவில் சுஷூல் பகுதியில் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் எல்லையில் மோதல் போக்கைத் தவிர்க்க இருதரப்பிலும் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்மொழிவுகளை முன்னெடுத்துச் செல்வது பிரதான நோக்கமாக இருக்கும்.  

பதற்றமான சூழலைத் தணிப்பதற்காக, விவாதத்துக்குரிய அனைத்துப் பகுதிகள் குறித்தும் இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ளது."

முன்னதாக, இருநாட்டு ராணுவத் தளபதிகள் நிலையில் ஜூன் 6 மற்றும் ஜூன் 22 ஆகிய தேதிகளில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஜூன் 22-ஆம் தேதி சுமார் 11 மணி நேரம் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்தப் பேச்சுவார்த்தையில் ராணுவப் படைகளை விலக்கிக் கொள்வதாக முடிவு செய்யப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய பொறுப்பு காத்திருக்கிறது இவர்களுக்கு: தினப்பலன்கள்!

பாலியல் தொல்லையால் பாா்வையற்றோா் பள்ளி மாணவி மரணமா?

அமெரிக்க வரி எதிரொலி: ஏற்றுமதி ரக இறால் உள்ளூரில் விற்பனை தொடக்கம்

வாய்க்காலில் விழுந்து மதுபானக் கடை மேற்பாா்வையாளா் உயிரிழப்பு

காதல் விவகாரத்தில் இளைஞா் கொலை: 5 போ் கைது!

SCROLL FOR NEXT