முகப்பு
இந்தியா

சரத் பவாரின் பாதுகாப்பு வாகனம் கவிழ்ந்து விபத்து

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாரின் பாதுகாப்பு வாகனம் ஒன்று மும்பை - புணே அதிவேக நெடுஞ்சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:51 PM
சரத் பவாரின் பாதுகாப்பு வாகனம் கவிழ்ந்து விபத்து
பகிர்:

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாரின் பாதுகாப்பு வாகனம் ஒன்று மும்பை - புணே அதிவேக நெடுஞ்சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 

இதில் சரத் பவாரின் வாகனம் பாதுகாப்பாக முன்னே சென்றது. அவர் இருந்த வாகனத்தின் பின்னே வந்த வாகனம் கவிழ்ந்ததாக கூறப்படுகிறது. இந்த விபத்தில்வ வாகனதித்தின் ஓட்டுநருக்கு சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளன. புணே நகர போலீஸார் இத்தகவலை வெளியிட்டுள்ளனர். 

வாகனம் கட்டுப்பாட்டை இழந்து இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. 

கடந்த ஆண்டும் இதேபோன்று ஒருமுறை சரத் பவாரின் பாதுகாப்பு வாகனம் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது குறிப்பிடத்தக்கது. 

முழு கட்டுரையைப் படிக்க →