​மும்பை தாராவிப் பகுதியில் இன்று (செவ்வாய்க்கிழமை) புதிதாக 6 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 
இந்தியா

தாராவியில் புதிதாக 6 பேருக்கு கரோனா

​மும்பை தாராவிப் பகுதியில் இன்று (செவ்வாய்க்கிழமை) புதிதாக 6 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

DIN


மும்பை தாராவிப் பகுதியில் இன்று (செவ்வாய்க்கிழமை) புதிதாக 6 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆசியாவின் மிகப் பெரிய குடிசைப் பகுதியான மும்பை தாராவியில் கரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டோர் பற்றிய அறிவிப்பை மும்பை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. இதன்படி, அங்கு புதிதாக 6 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 2,268 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவிலேயே கரோனா தொற்றால் அதிகம் பாதிப்புக்குள்ளாகிய மாநிலம் மகாராஷ்டிரம்தான். மகாராஷ்டிரத்தில் அதிகம் பாதிப்புக்குள்ளாகிய நகரம் மும்பை. மும்பை தாராவிப் பகுதியில் மக்கள் நெருக்கமாக வசிப்பதால், அங்கு கரோனா பரவல் குறித்த செய்தி பெரிதளவில் அச்சத்தை ஏற்படுத்தியது. ஆனால், அங்கு கரோனா பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதையடுத்து, கடந்த சில நாள்களாக அங்கு கரோனாவால் நாள்தோறும் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை 20-க்கும் குறைவாகவே பதிவாகி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருங்குயில்... திவ்யா துரைசாமி!

மகளிர் உலகக் கோப்பை தோல்வி எதிரொலி! பாகிஸ்தான் அணி தலைமைப் பயிற்சியாளர் நீக்கம்!

பிலிப்பின்ஸில் ‘கேல்மெகி புயல்’ கோரத்தாண்டவம்: 26 பேர் உயிரிழப்பு!

சத்தீஸ்கரில் 2 ரயில்கள் மோதி விபத்து: 4 பேர் பலி

”என்னைக் கொலைசெய்ய அன்புமணி 15 பேர் அனுப்பியுள்ளார்” அருள் பரபரப்புப் பேட்டி

SCROLL FOR NEXT