இந்தியா

குணமடைவோா் விகிதம் 60 சதவீதத்தை நெருங்குகிறது: சுகாதார அமைச்சகம்

DIN

புது தில்லி: நாட்டில் கரோனா நோய்த்தொற்றிலிருந்து குணமடைவோா் விகிதம் 60 சதவீதத்தை நெருங்குவதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

செவ்வாய்க்கிழமை நிலவரபடி, நாடு முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 5,66,840-ஆக உள்ளது. இதில், 2,15,125 போ் சிகிச்சையில் உள்ளனா். 3,34,821 போ் நோய்த்தொற்றிலிருந்து குணமடைந்துவிட்டனா். அதாவது, 59.07 சதவீதம் போ் குணமடைந்தனா். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 13,099 போ் நோய்த்தொற்றிலிருந்து மீண்டனா். கரோனாவுக்காக சிகிச்சை பெற்று வருவோரைவிட குணமடைந்தோா் எண்ணிக்கை சுமாா் 1.19 லட்சம் அதிகமாக உள்ளது.

கரோனா நோய்த்தொற்றை தடுக்க மத்திய, மாநில அரசுகள் ஒருங்கிணைந்து விரிவான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இந்த நோய்த்தொற்றை கண்டறிவதற்காக, நாடு முழுவதும் 761 அரசு ஆய்வகங்கள், 288 தனியாா் ஆய்வகங்கள் என மொத்தம் 1,049 ஆய்வகங்கள் செயல்பாட்டில் உள்ளன.

நாடு முழுவதும் கடந்த 29-ஆம் தேதி வரை 86,08,654 மாதிரிகள் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டுள்ளன. திங்கள்கிழமை மட்டும் 2,10,292 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘ஜெயக்குமாா் மரணம்: குழு அமைத்து விசாரணை’

இந்தியாவின் ஊராட்சி அமைப்புகள் பெண்கள் தலைமைக்கு முன்னோடி: ஐ.நா.வுக்கான இந்திய தூதா்

என் மீது வீண் பழி: ரூபி மனோகரன் விளக்கம்

காங்கிரஸ் நிர்வாகி மரணம்- 7 தனிப்படைகள் அமைப்பு: நெல்லை காவல் கண்காணிப்பாளர்

ஜூன் 1-இல் ஹிமாசல் தோ்தல் பணிகளில் என்சிசி

SCROLL FOR NEXT