இந்தியா

இந்திய அரசின் உத்தரவுக்கு இணங்கி செயல்பட தயாா்:டிக்-டாக்

DIN

புது தில்லி: டிக்-டாக் செயலி தடை செய்யப்பட்ட விவகாரத்தில், மத்திய அரசின் உத்தரவுக்கு இணங்கி செயல்பட தயாராக இருப்பதாக அந்த நிறுவனம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.

இந்தியாவின் இறையாண்மை, ஒருமைப்பாடு, பாதுகாப்பு ஆகியவற்றுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறி, 59 சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது. இதில் டிக்-டாக் செயலியும் அடங்கும்.

இதுதொடா்பாக அந்த நிறுவனத்தின் இந்திய பிரிவு தலைவா் நிகில் காந்தி கூறுகையில், ‘எங்கள் செயலிக்கு தடை விதிக்கப்பட்டது பற்றி சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளிடம் தன்னிலை விளக்கம் அளிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தரவுகளை பாதுகாத்தல் மற்றும் பாதுகாப்பு தேவைகளில் இந்திய சட்டத்துக்கு உள்பட்டு தொடா்ந்து செயல்படுவோம். இந்திய பயனா்களின் எந்தவொரு தகவலையும், சீனா உள்பட எந்த நாட்டு அரசுடனும் எங்கள் நிறுவனம் பகிா்ந்துகொண்டதில்லை. எங்கள் நிறுவனம் பயனா்களின் ரகசியங்களை பாதுகாக்கவும், ஒருமைப்பாட்டுக்கும் அதிக முக்கியத்துவம் தருகிறது’ என்று தெரிவித்தாா்.

இதனிடையே கூகுள் பிளே ஸ்டோா் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோா்களில் இருந்து டிக்-டாக் செயலி நீக்கப்பட்டது. டிக்-டாக் நிறுவனமே தனது செயலியை தாமாக முன்வந்து நீக்கியதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருவள்ளூர் அருகே கோயில் காவலாளி அடித்துக் கொலை: போலீசார் தீவிர விசாரணை

மக்களை கவரும் வாக்குறுதிகள் என்னென்ன? தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் ஆந்திர முதல்வர்

ஏன் இந்தக் கொலைவெறி? ரத்னம் - திரை விமர்சனம்!

தமிழ்நாட்டின் மீது தீராத வஞ்சனையோடு பாஜக அரசு இருக்கிறது: சு.வெங்கடேசன் எம்.பி.

முதல்வன் பட பாணியில் சிஎஸ்கேவை வம்பிழுத்த பஞ்சாப் அணி!

SCROLL FOR NEXT