முகப்பு
இந்தியா

மும்பை - புணே நெடுஞ்சாலையில் லாரி கவிழ்ந்ததில் சாலையோரம் நின்றிருந்த 5 பேர் பலி

மகாராஷ்டிர மாநிலம் ராய்காட் மாவட்டத்தில் மும்பை - புணே அதிவேக நெடுஞ்சாலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு ஒரு லாரி கட்டுப்பாட்டை இழந்தில் சாலையோரத்தில் நின்ற 5 பேர் பலியாகினர். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:03 PM
பகிர்:

மகாராஷ்டிர மாநிலம் ராய்காட் மாவட்டத்தில் மும்பை - புணே அதிவேக நெடுஞ்சாலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு ஒரு லாரி கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்ததில் சாலையோரத்தில் நின்ற 5 பேர் உடல் நசுங்கி பலியாகினர். 

கோபோலி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆண்டா பாயிண்ட் (Anda Point) வளைவு அருகே இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக போலீஸார் தகவல் தெரிவித்துள்ளனர். 

புனேவில் தலேகான் தபாடே (Talegaon Dabhade) பகுதியைச் சேர்ந்த 6 பேர் இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தனர். அப்போது, ஒருவர் சிறுநீர் கழிக்கச் செல்லவே, மற்ற 5 பேரும் சாலையோரத்தில் நின்று கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் எதிரே வந்த லாரி வளைவில் திரும்பும்போது கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. இதில், அங்கு நின்று கொண்டிருந்த 5 பேரும் லாரியின் இடையே சிக்கி சம்பவ இடத்திலயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். ஒருவர் சிறுநீர் கழிக்கச் சென்றதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். ஞாயிற்றுக்கிழமை இரவு 11 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. 

இதையடுத்து, லாரி ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

முழு கட்டுரையைப் படிக்க →