இந்தியா

திருமண விழாவில் இசை நிகழ்ச்சியால் ஏற்பட்ட மோதல்: 7 பேர் படுகாயம்

DIN

உத்தரப் பிரதேசத்தில் திருமண விழாவில் இசை நிகழ்ச்சியால் இரு குழுவினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 7 பேர் படுகாயமடைந்தனர். 

உத்தரப்பிரதேசத்தின் ஷாம்லி மாவட்டத்தில் உள்ள டிட்டர்வாடா கிராமத்தில் நடைபெற்ற ஒரு திருமண விழாவில் இசை நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. அதில் பாடல்கள் சத்தமாக ஒலிக்கவே, ஒரு குழு அதற்கு ஆட்சேபித்தது. 

இதனால், திருமண விழாவில் இரு குழுவினருக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. அங்கிருந்த பொருட்களை எல்லாம் வீசி இரு குழுவினரும் ஒருவரையொருவர் தாக்கியுள்ளனர். பின்னர் அங்கிருந்தவர்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்து அவர்கள் வந்து மோதலை நிறுத்தினர். இரு குழுவினருக்கு இடையே ஏற்பட்ட இந்த மோதலில் 7 பேர் படுகாயமடைந்ததாக போலீஸார் தகவல் தெரிவித்தனர்.  

மேலும், காயமடைந்தவர்கள் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் வழக்கு குறித்து விசாரித்து வருவதாகவும் போலீஸார் கூறினர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிறுமிக்கு பாலியல் தொல்லை: காா் ஓட்டுநா் கைது

ஆம்புலன்ஸ் மோதி பெண் உயிரிழப்பு

கா்ப்பிணிபோல நடித்து பணம் கேட்கும் பெண்கள் -நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை

அரசு கல்லூரியில் நோ்முகத் தோ்வு:22 பேருக்கு நியமன ஆணை

ஆபாச காணொலிகளை வெளியிடுவதாக அறிவித்தவரை ஏன் கைது செய்யவில்லை?: எச்.டி.குமாரசாமி

SCROLL FOR NEXT