முகப்பு
இந்தியா

பிரதமர் மோடியுடன் தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் இன்று சந்திப்பு

நாடாளுமன்றத்தில் இன்று பிரதமர் நரேந்திர மோடியை தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் சந்தித்துப் பேசுகிறார்.

Updated On : 3 மார்ச், 2020 at 11:06 AM
பகிர்:


புது தில்லி: நாடாளுமன்றத்தில் இன்று பிரதமர் நரேந்திர மோடியை தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் சந்தித்துப் பேசுகிறார்.

தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று 3வது முறையாக முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு பிரதமர் மோடியை இன்று முதல் முறையாக சந்திக்கிறார் அரவிந்த் கேஜரிவால்.

வடகிழக்கு தில்லியில் வெடித்த வன்முறை குறித்து இரு தலைவர்களும் இந்த சந்திப்பின் போது பேசக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள பிரதமரின் அறையில் இந்த சந்திப்பு 11 மணியளவில் நடைபெறுகிறது. முன்னதாக தில்லி துணை நிலை ஆளுநர் அனில் பைஜால் பிரதமர் மோடியை நேற்று சந்தித்து தில்லி வன்முறை குறித்து பேசிய நிலையில், இன்று தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலுடன் சந்திப்பு நிகழ்கிறது.

தில்லி வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளைச் செய்யும் பணியில் தில்லி அரசு ஈடுபட்டு வரும் நிலையில், இன்று பிரதமர் மோடியுடன் சந்திப்பு நடைபெற உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.