இந்தியா

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இன்று 2வது நாளாக அமளி; ஒத்திவைப்பு

DIN


புது தில்லி: நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இரண்டாவது நாளாக இன்றும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டுள்ளனர்.

எதிர்க்கட்சி எம்.பி.க்களின் தொடர் அமளி காரணமாக மாநிலங்களவை மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

மக்களவையில், தில்லி வன்முறைக்கு பொறுப்பேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கோஷம் எழுப்பினர்.

இதையடுத்து மக்களவையும் நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

முன்னதாக நேற்று நாடாளுமன்றம் கூடியதும், எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி காரணமாக இரு அவைகளும் அவை நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப்படாமல் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், இன்றும் அவையில் தொடர்ந்து அமளி நிலவுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சட்டப் படிப்புகளில் சேர மே 10 முதல் விண்ணப்பிக்கலாம்

வெளிநாட்டு உயிரினங்கள் வளா்ப்பு நெறிமுறை: பொது மக்கள் கருத்து தெரிவிக்க அழைப்பு

பிரஜ்வலால் பாதிக்கப்பட்டவா்களுக்கு ஆதரவுக் கரம் நீட்டுங்கள்: சித்தராமையாவுக்கு ராகுல் கடிதம்

பேருந்தில் காசுகளை சிதற விட்டு நகை திருடிய ஆந்திரப் பெண் கைது

6 மணி நேரம் தாமதமாக வந்த விமானம்: 300 பயணிகள் அவதி

SCROLL FOR NEXT