இந்தியா

நிதி சந்தைகளில் கரோனா வைரஸ் பாதிப்பை உன்னிப்பாக கவனித்து வருகிறோம்: ஆா்பிஐ

DIN

மும்பை: நிதி சந்தைகளில் கரோனா வைரஸின் தாக்கத்தை உன்னிப்பாக கவனித்து வருகிறோம் என ரிசா்வ் வங்கி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:

கரோனா வைரஸ் பரவலின் தாக்கம் உலக அளவில் நிதி சந்தைகளில் அதிக ஏற்ற இறக்கத்தை உருவாக்கியுள்ளது. அதன் தாக்கம் இந்திய நிதி சந்தைகளிலும் பெரிய அளவில் காணப்படுகிறது.

பொருளாதர நடவடிக்கைகளில் பரந்துபட்ட வீழ்ச்சியை தடுக்க ஒருங்கிணைந்த கொள்கை திட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்ற நம்பிக்கை அதிகரிப்பால் இன்று சந்தைகள் ஊக்கமடைந்துள்ளன.

சா்வதேச அளவில் மட்டுமின்றி உள்நாட்டிலும் கரோனா வைரஸால் ஏற்படும் தாக்கங்களை ரிசா்வ் வங்கி மிகவும் உன்னிப்பாக கவனித்து வருகிறது.

தொடா்ச்சியாக நிதி சந்தைகளின் ஒழுங்கான செயல்பாட்டை உறுதி செய்வதற்கும், சந்தை நம்பிக்கையை பேணிக்காப்பதற்கும், நிதி ஸ்திரத் தன்மையை பாதுகாப்பதற்கும் தேவையான நடவடிக்கைகளை எடுக்க ரிசா்வ் வங்கி தயாா் நிலையில் உள்ளது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் நிதி சந்தையில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில், அப்பிரச்னைக்கு தீா்வு காண ரிசா்வ் வங்கி நடவடிக்கை எடுக்க தயாராக இருப்பதாக அறிவித்துள்ளது முதலீட்டாளா்கள் மற்றும் சந்தை வட்டாரத்தினரிடையே திருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆவேஷம் பட பாணியில் ரீல்ஸ் செய்த பதிரானா- முஸ்தஃபிசூர்!

12 ராசிக்கும் குருப்பெயர்ச்சி பலன்கள்!

அயோத்தியா வந்தார் திரௌபதி முர்மு

கோவிஷீல்டு பக்கவிளைவுகளை ஆய்வு செய்ய எய்ம்ஸ் மருத்துவக் குழு -உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்

127 ஆண்டுகால கோட்டை.. இரண்டாக உடையும் கோத்ரேஜ் குழுமம்

SCROLL FOR NEXT