இந்தியா

மகாராஷ்டிரத்தில் 10ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்களுக்கு ‛பிட்'களை வீசிய இளைஞர்கள்

DIN

மகாராஷ்டிரத்தில் 10ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்களுக்கு இளைஞர்கள் ‛பிட்'களை வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மகாராஷ்டிரம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் தற்போது பொதுத்தேர்வுகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 10-ஆம் வகுப்பு மெட்ரிக் தேர்வுகளை யவாத்மால் மாவட்டம் மஹாகோன் என்ற நகரில் தேர்வு மையத்தில் மாணவர்கள் நேற்று எழுதி கொண்டிருந்தனர். 

அப்போது தேர்வு மைய அறையின் காம்பவுண்ட் சுவர் மீது ஏறிய இளைஞர்கள் சிலர் மாணவர்களுககு ‛பிட்'களை வீசினர். இதுதொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகின. இச்சம்பவத்தையடுத்து பள்ளியில் பாதுகாப்பை அதிகரிக்க நிர்வாகம் வலியுறுத்தியுள்ளது. 

மேலும் இதுதொடர்பாக அம்மாநில கல்வித்துறை விசாரணைக்கும் உத்தரவிட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐசிசி தரவரிசை வெளியீடு: டெஸ்ட்டில் இந்தியாவை பின்னுக்குத் தள்ளி ஆஸ்திரேலியா முதலிடம்!

புதிய 400சிசி இருசக்கர வாகனத்தை அறிமுகப்படுத்தியது பஜாஜ்!

தமிழகத்தில் மீண்டும் உச்சபட்ச மின் நுகா்வு

நீலகிரி மாவட்ட பதிவெண் கொண்ட வாகனங்களுக்கு இ-பாஸ் தேவையில்லை!

சிஎஸ்கே போட்டியில் பிரபலமான ரசிகரை கௌரவித்த லக்னௌ அணி!

SCROLL FOR NEXT