காஷ்மீரில் இரு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
காஷ்மீரில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் பயங்கரவாதிகள் இருவர் பாதுகாப்புப்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
காஷ்மீரில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் பயங்கரவாதிகள் இருவர் பாதுகாப்புப்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
தெற்கு காஷ்மீர் ஷோபியான் மாவட்டத்தில் ரெபான் பகுதி அருகே பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக வந்த தகவலையடுத்து, பாதுகாப்புப் படையினர் அப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு பதுங்கியிருந்த தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச்சண்டையில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். காஷ்மீர் போலீஸார் இதனை உறுதி செய்துள்ளனர். சுட்டுக்கொல்லப்பட்ட பயங்கரவாதிகளிடம் இருந்து ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
தொடர்ந்து அப்பகுதியில் தேடுதல் வேட்டையில் பாதுகாப்புப்படையினர் ஈடுபட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.