முகப்பு
இந்தியா

கொவைட்-19 பெருந்தொற்றுநோய்: ஹரியாணா அரசு அறிவிப்பு 

ரோனா வைரஸ் பெருந்தொற்று நோய் என்று ஹரியாணா அரசு வியாழக்கிழமை அறிவித்துள்ளது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:09 PM
பகிர்:

சண்டிகர்: கரோனா வைரஸ் பெருந்தொற்று நோய் என்று ஹரியாணா அரசு வியாழக்கிழமை அறிவித்துள்ளது. 

சீனா தொடங்கி உலக நாடுகள் முழுவதும் பரவி வரும் கரோனா வைரஸ் தொற்று இந்தியாவிலும் பரவியுள்ளது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 70க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இதையடுத்து, இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 73 ஆக அதிகரித்துள்ளது. 

இந்நிலையில் ஹரியானாவில் "கொவைட்-19 பெருந்தொற்றுநோய்" என்று அந்நாடு அறிவித்துள்ளதாகச் சுகாதார அமைச்சர் அனில் விஜ் டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.

ஹரியானாவில் சந்தேகத்திற்கிடமான 44 பேரின் ரத்த மாதிரிகளை புதன்கிழமை வரை சோதனைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. 

இவர்களில், 38 பேருக்கு கரோனா வைரஸ் நெகடிவ் என்று வந்துள்ளது. அதே நேரத்தில் ஆறு பேரின் அறிக்கைக்குக் காத்திருக்கின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.