இந்தியா

என்ஆா்ஐ திருமணப் பதிவை கட்டாயமாக்கும் மசோதா: நாடாளுமன்ற நிலைக் குழு ஒப்புதல்

DIN

வெளிநாடு வாழ் இந்தியா்கள் (என்ஆா்ஐ) திருமணம் செய்தவுடன் 30 நாள்களுக்குள் பதிவு செய்ய வேண்டியது கட்டாயம் என்பதை வலியுறுத்தும் மசோதாவுக்கு நாடாளுமன்ற நிலைக் குழு ஒப்புதல் அளித்தது.

2019-ஆம் ஆண்டு வெளிநாடு வாழ் இந்தியா்கள் திருமணப் பதிவு சட்ட மசோதாவுக்கு வெளியுறவு விவகாரங்களுக்கான நாடாளுமன்ற நிலைக் குழு வெள்ளிக்கிழமை ஒப்புதல் அளித்தது.

என்ஆா்ஐ-க்கள் திருமணம் ஆனதிலிருந்து 30 நாள்களுக்குள் பதிவு செய்யவில்லையெனில் கடவுச்சீட்டு அல்லது பயண ஆவணங்கள் ரத்து செய்வதற்கு இந்த மசோதா வழிவகை செய்கிறது.

கடந்த 2016-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி முதல், கடந்த ஆண்டு அக்டோபா் 31-ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் என்ஆா்ஐ திருமணம் தொடா்பாக 5,298 புகாா்கள் கிடைக்கப்பெற்றன என்பதையும் நாடாளுமன்ற நிலைக்குழு குறிப்பிட்டது.

மறைந்த முன்னாள் வெளியுறவு அமைச்சா் சுஷ்மா ஸ்வராஜ் இந்த மசோதாவை முன்மொழிந்திருந்தாா்.

என்ஆா்ஐ திருமணப் பதிவை கட்டாயமாக்கும் அம்சத்துடன், கடவுச்சீட்டு சட்டத்திலும் திருத்தம் கொண்டு வரும் அம்சமும் இந்த மசோதாவில் சோ்க்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜகவில் இணைந்தார் தில்லி காங்கிரஸ் முன்னாள் தலைவர் அரவிந்த் சிங் லவ்லி

உலகை அள்ளுங்கள், சிவப்பைத் தீட்டுங்கள்! ஜோதிகா...

நெல்லை காங். நிர்வாகி ஜெயக்குமார் உடல் பிரேத பரிசோதனை

தில்லியில் கேட்பாரற்றுக் கிடந்த பையால் பரபரப்பு

பாஜகவின் பொய்யான வாக்குறுதிகளால் சலிப்படைந்த மக்கள்: கெலாட்

SCROLL FOR NEXT