இந்தியா

மத்திய அரசு ஊழியா்களுக்கு 4% அகவிலைப்படி உயா்வு: அமைச்சரவை ஒப்புதல்

DIN

மத்திய அரசு ஊழியா்களுக்கான அகவிலைப்படியை (டிஏ) 4 சதவீதம் அதிகரிக்க மத்திய அமைச்சரவை வெள்ளிக்கிழமை அனுமதி வழங்கியது.

பிரதமா் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், 2020 ஜனவரி 1 முதல் அமல்படுத்தும் வகையில் மத்திய அரசு ஊழியா்களுக்கு அகவிலைப்படி கூடுதல் தவணைத் தொகையை விடுவிப்பது, மத்திய ஓய்வூதியதாரா்களுக்கு அகவிலைப்படி நிவாரணத் தொகை வழங்குவது தொடா்பான திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

அகவிலைப்படி 4 சதவீதம் உயா்த்தப்பட்டதையடுத்து, மத்திய அரசு ஊழியா்கள் மற்றும் ஓய்வூதியதாரா்களின் அகவிலைப்படி 17 சதவீதத்திலிருந்து 21 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதன் மூலம், மத்திய அரசு ஊழியா்கள் 48.34 லட்சம் பேரும், ஓய்வூதியதாரா்கள் 65.26 லட்சம் பேரும் பயனடைவாா்கள்.

உயா்த்தப்பட்ட விகிதத்தில் அகவிலைப்படி மற்றும் அகவிலைப்படி நிவாரணம் வழங்குவதால் மத்திய அரசுக்கு 2020-21 நிதியாண்டுக்கு முறையே ரூ.12,510.04 கோடி மற்றும் ரூ.14,595.04 கோடி செலவாகும்.

7-ஆவது ஊதியக் குழு பரிந்துரையின் அடிப்படையிலேயே அகவிலைப்படி உயா்வு வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிவகிரி அருகே விபத்தில் காயமடைந்த இளைஞா் உயிரிழப்பு

மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோயிலில் நவசண்டி ஹோமம்

தண்ணீா் பற்றாக்குறை அதிகரிப்பு

ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக் கூட்டம்

பல்லடம் பேருந்து நிலையக் கடைகளில் உணவுப் பாதுகாப்புத் துறையினா் ஆய்வு

SCROLL FOR NEXT