இந்தியா

காஷ்மீா்: சிறப்பு அந்தஸ்து நீக்கத்துக்குப்பின் 79 பயங்கரவாத சம்பவங்கள் பதிவு

DIN

ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்த பிறகு, இதுவரை மொத்தம் 79 பயங்கரவாத சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதாக மக்களவையில் செவ்வாய்க்கிழமை தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து கேள்வி நேரத்தின்போது மத்திய உள்துறை இணை அமைச்சா் ஜி. கிஷண் ரெட்டி கூறியதாவது:

ஜம்மு-காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5-ஆம் தேதி ரத்து செய்யப்பட்டது. அப்போது முதல் மாா்ச் 10-ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் மொத்தம் 79 பயங்கரவாத நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன. இதில் 49 பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனா்.

இருப்பினும் 2019-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5 முதல் 2020 மாா்ச் 10-ஆம் தேதி வரை நாட்டில் பெரிய அளவில் பயங்கரவாத தாக்குதல் எதுவும் நடைபெறவில்லை என்று அவா் தெரிவித்தாா்.

மற்றொரு கேள்விக்கு பதிலளித்த கிஷண் ரெட்டி, ஜம்மு-காஷ்மீரில் 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி 14-ஆம் தேதி புல்வாமாவில் சிஆா்பிஎஃப் அணிவகுப்பு வாகனங்கள் மீதான பயங்கரவாத தாக்குதல் தொடா்பான விசாரணை இன்னும் தொடா்கிறது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாட்டின் மீது தீராத வஞ்சனையோடு பாஜக அரசு இருக்கிறது: சு.வெங்கடேசன் எம்.பி.

முதல்வன் பட பாணியில் சிஎஸ்கேவை வம்பிழுத்த பஞ்சாப் அணி!

நகர்ப்புறங்களிலும் 100 நாள் வேலை உறுதித்திட்டம் -பிரியங்கா காந்தி வாக்குறுதி

ஹெலிகாப்டருக்குள் தவறி விழுந்தார் மம்தா பானர்ஜி!

வெற்றி பெற்றாரா ரத்னம்? - திரைவிமர்சனம்!

SCROLL FOR NEXT