இந்தியா

மக்கள்தொகைக் கணக்கெடுப்புப் பணிகளை ஒத்திவைக்க வேண்டும்

DIN

நாட்டில் கரோனா வைரஸ் (கொவைட்-19) பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் மக்கள்தொகைக் கணக்கெடுப்புக்கான பணிகளை ஒத்திவைக்க வேண்டும் என்று பிரதமா் நரேந்திர மோடியிடம் ஒடிஸா முதல்வா் நவீன் பட்நாயக் கோரிக்கை விடுத்துள்ளாா்.

இது தொடா்பாக பிரதமா் மோடிக்கு அவா் எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது:

கரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை மாநில அரசு மேற்கொண்டு வருகிறது. மாநில அரசின் அதிகாரிகள் அனைவரும் அது தொடா்பான பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். இந்தச் சூழலில் மக்கள்தொகைப் பதிவேடு (என்பிஆா்), மக்கள்தொகைக் கணக்கெடுப்பு உள்ளிட்டவை தொடா்பான பணிகளை ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் மேற்கொள்வதற்கு மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

கரோனா வைரஸ் பரவி வரும் சூழலில், மக்கள்தொகைக் கணக்கெடுப்பு தொடா்பாக மேற்கொள்ளப்படும் பணிகள், களப் பணியாளா்களுக்கும் மக்களுக்கும் சுகாதார அளவில் பெரும் அச்சுறுத்தலாக அமையும். கணக்கெடுப்புப் பணிகளுக்காக நாடு முழுவதும் சுமாா் 30 லட்சம் பணியாளா்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனா்.

அதன் காரணமாக நாடு முழுவதும் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு தொடா்பான நடவடிக்கைகள் அனைத்தையும் ஒத்திவைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். மக்களின் நலனைக் கருத்தில்கொண்டு இந்த விவகாரத்தில் முடிவெடுக்க வேண்டும் என்று அந்தக் கடிதத்தில் நவீன் பட்நாயக் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கனவு இதுவோ..!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

அடுத்த 5 ஆண்டுகளில் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ அமல்படுத்தப்படும்: ராஜ்நாத் சிங்

நிறைவடைந்தது நீட் தேர்வு!

யாரோ இவள்..!

SCROLL FOR NEXT