இந்தியா

இந்தியாவில் கரோனா பாதிப்பு 271-ஆக உயர்வு

DIN

நாடு முழுவதும் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 271-ஆக உயா்ந்துள்ளது. 

உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா கடந்த சில நாட்களாக இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இதையடுத்து மத்திய, மாநில அரசுகள் தீவிர தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன்ஒரு பகுதியாக, வரும் ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 22) சுய ஊரடங்கை அதாவது மக்கள் யாரும் வெளியே வராமல் வீடுகளிலேயே இருக்க பிரதமா் அறிவுறுத்தியுள்ளாா்.

இந்தநிலையில் கரோனா வைரஸால் இந்தியாவில் இதுவரை பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 271-ஆக உயர்ந்துள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. மேலும் வைரஸுக்கு 4 இந்தியர்கள், ஒரு இத்தாலியர் என மொத்தம் 5 பேர் பலியாகியுள்ளனர். இதுவரை 23 போ் வைரஸ் பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளனா்.

அதிகபட்சமாக மகாராஷ்டிரத்தில் 52 பேரும், கேரளத்தில் 40 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனா். அதேசமயம், தமிழகத்தில் கரோனாவால் 3 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் ஒருவர் குணமடைந்து அண்மையில் வீடு திரும்பினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வணிக சிலிண்டர் விலை குறைப்பு: எவ்வளவு?

தலைமைச் செயலக பணி பெயரில் போலி நியமனம்: தரகா்களிடம் பணம் கொடுத்து ஏமாறும் பட்டதாரிகள்

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்!

இன்றைய ராசி பலன்கள்!

தில்லி பிரதேச காங்கிரஸின் இடைக்காலத் தலைவராக தேவேந்தா் யாதவ் நியமனம்

SCROLL FOR NEXT